கார் டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

கார் டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-28 22:01 GMT
தாரமங்கலம்:
தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). கார் டிரைவர். கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு சென்ற ரமேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் நெலமங்கலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒன்சங்கரா ஏரியில் பிணமாக கிடந்தார். அவரை கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக்கொலை செய்து, உடலில் கல்லை கட்டி வீசி உள்ளனர். இதைத்தொடர்ந்து தாரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ரமேசின் நண்பர்கள் தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சேகர் (28), ராதாகிருஷ்ணன் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
மேலும் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  தினேஷ் (23), சங்கர் (26), மணிகண்டன் (21), சதீஷ் (19) ஆகிய 4 பேரையும் போலீசார் தாரமங்கலம் பஸ் நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்