கோவிலில் நகை-பணம் திருடிய 2 பேர் கைது
கோவிலில் நகை-பணம் திருடிய 2 பேர் சிக்கினர்;
திருவெறும்பூர்
துவாக்குடியை அடுத்த ராவத்தான்மேடு பகுதியில் ஓம்சக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் புகுந்து அங்குள்ள உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்க தாலியையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காட்டூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மன்சூர்அலி (வயது 27), உசேன் அலி(32) என்பதும், அவர்கள் தான் கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதும் தெரிய வந்தது. அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.