ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 297 பேருக்கு பரிசோதனை செய்ததில், 71 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து 94 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 83 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 553 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 682 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 857 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.