டப்பாவில் தலை சிக்கியதால் தவித்த நாய்

டப்பாவில் தலை சிக்கியதால் தவித்த நாய்

Update: 2021-10-28 20:29 GMT
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர் நகர் பஸ் நிறுத்தம் அருகே தென்பழஞ்சி மெயின்ரோட்டில் ஒரு நாயின் தலையில் "பிளாஸ்டிக் டப்பா" மாட்டிக்கொண்டது. இதனால் அந்த நாய் அங்கும், இங்குமாக ரோட்டில் குறுக்கே பரிதாபமாக ஒடிக்கொண்டிருந்தது. இதை கண்டவர்கள் திருநகரில் உள்ள ஊர்வனம் விலங்குகள் பாதுகாப்புகுழுவின் பொறுப்பாளர் விஷ்வாவிற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மீட்பு குழுவினர்கள் சீனிவாசன், வித்தோஷ்குமார், வீரமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போராடி அந்த நாயை ஒரு வலைக்குள் பிடித்தனர். இதனையடுத்து நாயின் தலையில் மாட்டிய டப்பாவை வெட்டி அகற்றினர். பின்னர் வலையில் இருந்து நாயை வெளியே விட்டனர். உடனே அந்த நாய் துள்ளி குதித்து ஒடியது. இதை கண்டவர்கள் மீட்பு குழுவினருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்