பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பேட்டை:
நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மூட்டா பேராசியர் சங்கம் சார்பாக நேற்று முன்தினம் வாயில் முழக்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், நெல்லை மாவட்டத்தில் உள்ள 2 தனியார் கல்லூரியில் சேர்ந்த பேராசிரியர்களை பணிஇடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்தனர். போராட்டத்தில் துணைத்தலைவர் நசீர் அகமது, மண்டல செயலாளர் சிவஞானம், பொருளாளர் கோமதி நாயகம் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.