ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைத்த காணி இன மக்கள்

பருமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் குறுக்கே காணி இன மக்கள் தொங்கு பாலம் அமைத்தனர்.

Update: 2021-10-28 19:36 GMT
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு பகுதியில் காணி இன மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலத்தில் பாபநாசம் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்படும் போது சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு பகுதிக்கு செல்ல முடியாமல் அவர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகவும் சிரமப்படுவது உண்டு. தற்போது பாபநாசம் அணையில் 135 அடிக்கு தண்ணீர் உள்ளதாலும், பருவமழை தீவிரமடைந்து வருவதாலும் அங்கு பாலம் அமைக்க வேண்டும் என காணி இன மக்கள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 
அதன்பேரில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அவர்களுக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கயிறு வழங்கியுள்ளனர். அதனை கொண்டு அங்கு வாழும் காணி இன மக்கள் அவர்களாகவே மரக்கம்புகளையும், மரக்கட்டைகளையும் அடுக்கி தொங்கு பாலம் ஒன்று ஆற்றின் குறுக்கே அமைத்துள்ளனர். சுமார் 15 அடி உயரமுள்ள இந்த பாலத்தால் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விட்டாலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என மலைவாழ் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்