தொழிலாளி குடும்பத்துக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்
மூலைக்கரைப்பட்டி அருகே மின்னல் தாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே செண்பகராமநல்லூர் பஞ்சாயத்து நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் இறந்தார். இந்த நிலையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நொச்சிகுளம் கிராமத்துக்கு சென்று சுடலையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது சுடலையின் இளைய மகள் இசக்கியம்மாளின் (வயது 11) கல்வி செலவை ஏற்பதாகவும், மூத்த மகன் மாசானமுத்துவுக்கு (21) படிப்புக்கு ஏற்ற வேலை வாங்கி தருவதாகவும் எம்.எல்.ஏ. கூறினார்.