டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு; 2 பேர் மீது வழக்கு

ஏர்வாடி அருகே டிரைவரை மிரட்டி பணம் பறித்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2021-10-28 19:28 GMT
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 31). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று அவர் சேசையாபுரத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராஜன் மகன் மணிகண்டன், வடக்கு வள்ளியூரை சேர்ந்த சுப்பையா மகன் உள்ளமுடையார் ஆகியோர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்தார். 
இதையடுத்து அந்த 2 பேரும், அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.400-ஐ பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார், மணிகண்டன், உள்ளமுடையார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்