விபத்தில் கார் சேதம்; போலீசில் புகார்
சிவகாசி அருகே விபத்தில் கார் சேதம் அடைந்தது. இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;
சிவகாசி,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ள ரெட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 22).இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் சிவகாசி அருகே உள்ள மாரனேரிக்கு காரில் வந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையின் முன்பு ரோட்டோரத்தில் காரை நிறுத்தி விட்டு பட்டாசு வாங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மாதங்கோவில்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் அதிவேகமாக வந்து நிலைத்தடுமாறி காரின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கார் சேதம் அடைந்தது. இது குறித்து திருமூர்த்தி மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் செல்வக்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.