கோவிலுக்கு சொந்தமான 33½ ஏக்கர் நிலம் மீட்பு

தாராபுரம் அருகே பொன்னாழிபாளையம் காடுஅனுமந்தராயசாமி கோவிலுக்கு சொந்தமான 33½ ஏக்கர் நிலத்தை தனி நபர்களிடமிருந்து இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மீட்டனர்.

Update: 2021-10-28 18:29 GMT
தாராபுரம்
தாராபுரம் அருகே பொன்னாழிபாளையம் காடுஅனுமந்தராயசாமி கோவிலுக்கு சொந்தமான  33½ ஏக்கர் நிலத்தை  தனி நபர்களிடமிருந்து இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மீட்டனர்.
காடு அனுமந்தராயசாமி கோவில்
தாராபுரம் அருகே பொன்னாழிபாளையத்தில் காடுஅனுமந்தராய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் பல்வேறு ஊர்களில் உள்ளன. அதே போல் பொன்னாழிபாளையத்திலும் 13½  ஏக்கர் பரப்பளவு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை  அதே பகுதியை சேர்ந்த ரஜினி, கருப்புசாமி, சித்ரா, பழனிசாமி உள்ளிட்டோர் கடந்த 25 காலமாக கோவில்  அனுபவித்து வந்தனர். ஆனால் அதற்கான குத்தகை பணத்தை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 
தற்போது தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்து இருந்தார். அதன்படி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிமிப்பு நிலம் மீட்கப்பட்டு வருகிறது. 
33½ ஏக்கர் நிலம் மீட்பு
 தாராபுரம் பகுதியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதுபோல் காடு அனுமந்தராய கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் மேனகா மற்றும் உதவி ஆணையர் திருப்பூர் சதீஷ், செயல் அலுவலர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், வருவாய்த்துறையினர் மற்றும் பணியாளர்கள் பொன்னாழிபாளையத்திற்கு சென்றனர். 
பின்னர் ஆக்கிரமிப்பில் இருந்த  13.55 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்தனர். அப்போது அதன் மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சம் என அறநிலையதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.  

மேலும் செய்திகள்