மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மங்கலம் கிராமம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 44). இவர், மரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.