தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தேசூர்பாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி அலமேலு. இவர்களுக்கு மாசிலாமணி (வயது 16) என்ற மகன், கவுரி (14) நந்தினி (10) என 2 மகள்கள் உண்டு.
இதில், கவுரி திண்டிவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி அங்குள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த கவுரி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருபானந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.