எருமப்பட்டி அருகே தகராறில் வாலிபர் மீது தாக்குதல்; பெயிண்டர் கைது

எருமப்பட்டி அருகே தகராறில் வாலிபர் மீது தாக்குதல்; பெயிண்டர் கைது

Update: 2021-10-28 17:02 GMT
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் அருண்பிரசாத் (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ளார். 
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் மகனான பெயிண்டர் சந்தோஷ்குமார் (19) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணுக்கு அருண்பிரசாத் தனது செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், அருண்குமார் வீட்டுக்கு சென்று ஏன் என் காதலிக்கு குறுந்தகவல் அனுப்பினாய் என்று கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார் தான் வைத்திருந்த கத்தியால் அருள் பிரசாத் கையில் தாக்கினார். 
இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் வாகனம் மூலம் எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தி பெயிண்டர் சந்தோஷ்குமாரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்