வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலி
வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலி
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
எலக்ட்ரீசியன்
வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் தாசன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை தனது மோட்டார்சைக்கிளில் சேலம் மாவட்டம் மல்லூர் சென்று விட்டு மீண்டும் அத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெண்ணந்தூர் அருகே 3 மூலக்காடு என்ற பகுதியில் சென்றபோது, மோட்டார்சைக்கிள் கண்ணன் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கண்ணன் உயிருக்கு போராடினார்.
விசாரணை
இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் கண்ணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.