வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-28 16:31 GMT
வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் தொடக்க உரையாற்றினார். 

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தெருக்களில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும். சாலைகளின் தரத்தை சோதனை செய்ய வேண்டும். ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான தரமான மணல், ஜல்லி, கம்பி ஆகிய பொருட்களை உபயோகிக்க வேண்டும். சத்துவாச்சாரி- காங்கேயநல்லூர் தரைப்பாலம் அமைக்க வேண்டும். வேலூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தயாநிதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்