அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் ஒற்றுமை ஓட்டம்

தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் ஒற்றுமை ஓட்டம்

Update: 2021-10-28 16:31 GMT
அரக்கோணம்

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தினை அம்ரித் மகோத்சவ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் இருந்து தொடங்கிய ஒற்றுமை ஓட்டத்தை தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் ராய் மற்றும் துணை கமாண்டன்ட் ராஜன் பாலு ஆகியோர் ஒற்றுமை ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பெரிய களகாட்டூர் வரை 5 கிலோமீட்டர் தூரம் சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்