அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.69 லட்சம் உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.69 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் இக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.
இந்த பணி அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில், உண்டியல் காணிக்கையாக ரூ.68 லட்சத்து 97 ஆயிரத்து 87-ம், 345 கிராம் தங்கமும், 382 கிராம் வெள்ளியும் பெறப்பட்டுள்ளது.