பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அய்யன்கொல்லி அருகே கள்ளிச்சால் பகுதியில் ரேஷன் கடை அருகில் மண் சரிவு ஏற்பட்டது.
இதேபோன்று அட்டக்கடவு பகுதியில் ரமணி என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு நிகழ்ந்தது. மேலும் ரோசம்மாள் என்பவரது வீடு இடிந்தது.