தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் தேடிவருகின்றனர்;

Update: 2021-10-28 14:21 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி சின்னமணிநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 64). இவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது, யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்