ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ 1 லட்சம் மோசடி
ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ 1 லட்சம் மோசடி
கோவை
கோவையில் வாடிக்கையாளர் விவரம் சேகரிப்பதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
கோவை வடவள்ளி லட்சுமி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது69). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது எண்ணிற்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது அவர் வங்கியில் இருந்து பேசுவதாக வும், வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிக்கப்படுவதால், விவரங்களை கூறும்படி தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து அவர் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை தெரிவித்து உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து இவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக குறுஞ்செய்தி வந்து உள்ளது.
ரூ.1 லட்சம் மோசடி
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி கணக்கில் உள்ள பண இருப்பு குறித்து சரிபார்த்து உள்ளார். அப்போது அதில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, செல்போன் மூலமாக யார் தொடர்பு கொண்டு பேசினாலும் வங்கி கணக்கு விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கக்கூடாது. மேலும் வங்கியில் இருந்து வரும் ஓ.டி.பி. எண்ணை மற்றவர்களிடம் தெரிவிக்கக்கூடாது என்றனர்.