ஆம்னி வேனில் திடீர் தீ

ஆம்னி வேனில் திடீர் தீ

Update: 2021-10-28 13:52 GMT
குன்னூர்

குன்னூர் அருகே உள்ள எல்லநள்ளி பகுதியை சேர்ந்தவர் அஜ்மல். இவர் தனது ஆம்னி வேனில் சிப்ஸ் பாக்கெட்டுகளை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் அஜ்மல் நேற்று முன்தினம் இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு ஆம்னிவேனை தனது வீட்டின் அருகில் உள்ள சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஆம்னி வேன் மற்றும் அதில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டுகள் கருகின. இதுகுறித்து கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி வேனில் தீப்பிடித்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்