ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தாக்கிய 3 பேர் கைது
தேர்தல் முன்விரோதத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது தென்மேல் பாக்கம் ஊராட்சி. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி. மு.க.வை சேர்ந்த கோவிந்தராஜ் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். பின்னர் நடந்த மறைமுகத்தேர்தலில் 5-வது வார்டை சேர்ந்த சாந்தகுமாரி துணைத்தலைவராக வெற்றிபெற்றார்.
இந்தநிலையில் தேர்தல் முன் விரோதம் காரணமாக தென்மேல் பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் (வயது 35), வினோத்குமார் (36), சந்தானம் (46), தனசேகரன், ரகுபதி ஆகியோர் பெண் துணை தலைவரான சாந்தகுமாரியை தாக்கியுள்ளனர்.
கைது
இதுகுறித்து சாந்தகுமாரியின் கணவர் அரிபாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர், வினோத்குமார், சந்தானம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள தனசேகரன், ரகுபதியை போலீசார் தேடி வருகின்றனர்.