பெயிண்டர் கொலையில் நண்பர் கைது

திசையன்விளை அருகே பெயிண்டர் கொலையில் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-27 20:14 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ரமேஷ் (வயது 32). பெயிண்டரான இவர் நேற்று முன்தினம் இரவில் திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள காலி இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நண்பரான திசையன்விளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முருகானந்தம் (21) என்பவர் ரமேஷ் தலையில் இரும்பு கம்பியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்