இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
வள்ளியூர்:
வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், வள்ளியூர் நகர செயலாளர் வேம்பு சுப்பையா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வள்ளியூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அமைக்க வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து, அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.