ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் மூலம் ரூ.95¾ லட்சம் வருமானம்

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் மூலம் ரூ.95¾ லட்சம் வருமானம்

Update: 2021-10-27 19:52 GMT
திருச்சி, அக்.28-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் உண்டியல்களை திறந்து எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை கருட மண்டபம் பகுதியில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில், கோவில் உதவி ஆணையர் கந்தசாமி, புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வல தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.95 லட்சத்து 79 ஆயிரத்து 559 ரொக்கமும், 271 கிராம் தங்கமும், 1,233 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 78-ம் இருந்தது.

மேலும் செய்திகள்