விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 5 வாரம் நிலுவை சம்பள தொகையை வழங்க வேண்டும்.
சம்பளம்
சாதி அடிப்படையில் வேலை மற்றும் சம்பளம் வழங்கும் பிரிவினைவாத போக்கை கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் உமாநாத், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், தெட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பரிமளா மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்
இதேபோல வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய தலைவர் இளையபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.