கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான முத்தங்கி கவசம் காணிக்கை
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான முத்தங்கி கவசம் காணிக்கையாக வழங்கப்பட்டது.
கரூர்,
கரூர் தாந்தோன்றிமலையில் பழமைவாய்ந்ததும், பிரசித்திபெற்றதுமான கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான செப்பு கவசத்தில் வெல்வெட்டு துணியின் மீது முத்துக்கல் பதித்த முத்தங்கி கவசத்தை பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தினர்.