கொக்குகள் பிடித்த 2 பேர் கைது
தரங்கம்பாடி அருகே கொக்குகள் பிடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
தரங்கம்பாடி அருகே கொக்குகள் பிடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொக்குகள் பிடித்த 2 பேர் கைது
தரங்கம்பாடி தாலுகா சின்னூர்பேட்டை கடற்கரை பகுதியில் சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். உடனே வனத்துறையினர் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கிராமம் கீழகாசகுடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 44), சம்பந்தம் மகன் பாஸ்கரன் (24) என்பதும், அவர்கள் 2 பேரும் நயிலான் வலைவிரித்து கொக்குகளை பிடிப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் எச்சரித்து அனுப்பினர்.