குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-27 18:34 GMT
பெரம்பலூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சிக்கு குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பரசன், பொருளாளர் நாகராஜ், ஆலோசகர் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் மரியதாஸ், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்கரபாணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியமும், நிலுவை தொகையும், தூய்மை காவலர்களுக்கு கலெக்டர் அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும். குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர் பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் பொருளாளர் சின்னப்பிள்ளை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்