நாமக்கல்லில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் மர்மசாவு உதவி கலெக்டர் விசாரணை
நாமக்கல்லில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் மர்மசாவு உதவி கலெக்டர் விசாரணை
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 23). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சிந்துஜா வீட்டில் உள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிந்துஜாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், அவரது சாவுக்கான காரணம் குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளாவும் விசாரணை நடத்தி வருகிறார்.