விபத்தில் வாலிபர் பலி

செட்டிநாடு அருகே விபத்தில் வாலிபர் இறந்தார்.;

Update: 2021-10-27 17:50 GMT
காரைக்குடி,

செட்டிநாடு போலீஸ் சரகம் நங்கபட்டி நடுதெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 19). இவர் சொந்த வேலையாக கானாடுகாத்தான் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திருச்சி-காரைக்குடி- பைபாஸ் சாலையில் கோவில்பட்டி விலக்கு அருகே வந்த போது காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து செட்டிநாடு போலீசார் கார் ஓட்டி வந்த திருச்சியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்