உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உரிய நேரத்தில் சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளர்களும் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச விலையை விட அதிகமான விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும் கூடுதல் விலைக்கு உர விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த புகர்களை தெரிவித்திட கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் புதியதாக குறைகேட்பு பிரிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். இங்கு 04151-291335 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் வேளாண் உதவி இயக்குனர்கள் சின்னசேலம் -9486012682, கள்ளக்குறிச்சி -9443841066, சங்கராபுரம்-8248110335, ரிஷிவந்தியம்-9940669943, தியாகதுருகம்-9600870410, திருக்கோவிலூர்-9750682505, உளுந்தூர்பேட்டை-8825457582, திருநாவலூர்-8610187822 மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) 9443844332 ஆகிய செல்போன் எண்களில் குறுஞ்செய்தியாகவோ அல்லது செல்போன் மூலமாகவோ தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.