குடியாத்தத்தில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

Update: 2021-10-27 17:15 GMT
குடியாத்தம்

குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கியாக ரூ.1½கோடிக்குமேல் உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்குமாறு வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பி.குபேந்திரன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ் மேற்பார்வையில் நகராட்சி மேலாளர் டி.கே.சுகந்தி, வருவாய் ஆய்வாளர் சந்திரமோகன், நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன், உதவியாளர் யுவராஜ் உள்ளிட்டோர் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா தெரு, அர்ஜூன முதலி தெரு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை பாக்கி வைத்திருந்த 12 கடைகளுக்கு சீல் வைத்தனர். நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க வரும் தகவல் அறிந்ததும் சில கடைக்காரர்கள் தங்களின் வாடகை பாக்கியை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்