இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க தி.மு.க. சதி

இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க தி.மு.க. சதி செய்கிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-10-27 13:05 GMT
தேனி:

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் நேற்று முன்தினம் 7 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கோவிலுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று நேரில் வந்து பார்வையிட்டார். 
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர், "தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கோவில்களில் சிலை கடத்தல், நகை திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முல்லைநகர் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிலைகளை திருடிய உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். நக்சல் பயங்கரவாதிகளுக்கு இந்த சிலை திருட்டில் தொடர்பு இருக்கலாம் என்று கருதுவதால் தெளிவாக விசாரணை நடத்த வேண்டும். பக்தி மூலம் தான் தமிழகத்தில் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதை சீர்குலைக்க தி.மு.க. சதி செய்கிறது" என்றார். 

அப்போது மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்