வியாபாரி கைது

பெட்டிக்கடையில் பட்டாசு விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-27 12:50 GMT
கூடலூர்:

கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார், கீழக்கூடலூர் அருந்ததியர் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில், ராஜாமுகமது (வயது 36) என்பவர் அரசு அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதனை கண்ட போலீசார், கடையில் இருந்த ரூ.9 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாதுகாப்பு இன்றி அஜாக்கிரதையாக பட்டாசுகளை விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து ராஜாமுகமதுவை போலீசார் கைது செய்தனர். 

இதேபோல் பூக்கடை வீதி, மெயின்பஜார், தேவர் சிலை அருகில் மற்றும் முனியாண்டி கோவில்தெரு பகுதிகளிலும் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்