சுகாதார துணை இயக்குனரின் லாக்கரில் இருந்த 160 பவுன், ரூ.30 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
சுகாதார துணை இயக்குனரின் லாக்கரில் இருந்த 160 பவுன், ரூ.29 லட்சத்து 80 ஆயிரத்து 500-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.;
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பழனி. இவருடைய அலுவலகத்தில் கடந்த 18-ந்தேதி, காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதில் அவரது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 300 மற்றும் அவரது வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 900 பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
இ்ந்தநிலையில் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோர்ட்டு ஆணை பெற்று பழனி வங்கி கணக்கு வைத்துள்ள சென்னை திருமங்கலம் தனியார் வங்கி லாக்கரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது லாக்கரில் இருந்த கணக்கில் வராத ரூ.29 லட்சத்து 80 ஆயிரத்து 500 மற்றும் 160 பவுன் நகைகளை பறிமுதல் செய்து, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.