கார் டிரைவர் அடித்துக்கொலை: ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொன்றேன்’-கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

மனைவியுடன் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் அடித்துக்கொன்றேன் என்று கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-10-26 21:44 GMT
தாரமங்கலம்:
மனைவியுடன் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் அடித்துக்கொன்றேன் என்று கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கார் டிரைவர்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). கார் டிரைவர். கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு சென்ற ரமேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி வெண்ணிலா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார் டிரைவர் ரமேசை தேடி வந்தனர். 
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் நெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒன்சங்கரா ஏரியில் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொலை செய்து, உடலில் கல்லை கட்டி வீசி உள்ளனர். மேய்ச்சலுக்கு வந்த எருமைமாடுகள் ஏரியில் இறங்கிய போது, அவரது உடல் வெளியே வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது ரமேஷ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தாரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
பரபரப்பு வாக்குமூலம்
விசாரணையில் கார் டிரைவர் ரமேஷ் கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ரமேசின் நண்பர்கள் தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சேகர் (28), ராதாகிருஷ்ணன் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைதான சேகர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ரமேசின் நண்பர் சேகர். இதன் மூலம் சேகரின் மனைவியுடன் ரமேசிற்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் சேகருக்கு தெரியவந்தது. அவர் ரமேசை கண்டித்தார். 
அடித்துக்கொலை
மேலும் தனது மனைவியுடன் உள்ள தொடர்பை துண்டித்துக்கொள்ளுமாறு கூறி உள்ளார். ஆனால் அதற்கு ரமேஷ் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், ரமேசை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர் ராதாகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் உதவியை நாடினார். இதைத்தொடர்ந்து கார் விற்பனைக்கு வந்துள்ளாக கூறி, ரமேசை காரில் கடத்தி சென்றனர். கர்நாடக மாநிலம் நெலமங்கலம் பகுதிக்கு சென்று அங்கு, அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்துக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலில் கல்லைக்கட்டி ஏரியில் வீசி உள்ளனர்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சேகரின் உறவினர்களான 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

மேலும் செய்திகள்