பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
நித்திரவிளை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில்ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளிக்கு சென்றவர்
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி மங்காடு பனங்குடல் வீடு பகுதியை சேர்ந்தவர் அனுஷா (வயது 28). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள் வாவறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த விடைத்தாள்களை பள்ளியில் கொடுப்பதற்காக அனுஷா நேற்று மாலை பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.
விடைத்தாள்களை பள்ளியில் ஒப்படைத்து விட்டு சாைலயோரமாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர்.
நகை பறிப்பு
அவர்கள் திடீரென அனுஷாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுஷா நகையை மீட்பதற்காக ‘திருடன்... திருடன்...’ என சத்தம் போட்டார். மேலும் தனது தங்க தாலியை காப்பாற்ற கொள்ளையர்களிடம் போராடினார். இந்த போராட்டத்தில் தாலி சங்கிலியில் இருந்து ஒரு பவுன் டாலர் தனியாக அறுந்து கீழே விழுந்தது. அதை அனுஷா எடுத்துக்கொண்டார். மீதி 10 பவுன் நகை கொள்ளையர்கள் கையில் சிக்கியது.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் நகையுடன் வேகமாக தப்பி ெசன்றனர். இதுகுறித்து அனுஷா நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ெஹல்மெட் அணிந்த கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
ஹெல்மெட் அணிந்த ஆசாமிகள்
அப்போது, ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.