இளங்கோவன் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கைப்பற்றப்பட்ட ரூ.34¼ லட்சம் சேலம் கோர்ட்டில் ஒப்படைப்பு
இளங்கோவன் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரூ.34¼ லட்சம் சேலம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
சேலம்:
இளங்கோவன் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரூ.34¼ லட்சம் சேலம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ஆர்.இளங்கோவன். இவர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவனின் வீடு மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
கோர்ட்டில் ஒப்படைப்பு
அதாவது, சேலம், சென்னை, கோவை, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இளங்கோவனுக்கு தொடர்புடைய 36 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கார்கள் உள்ளிட்டவைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பணத்தை சேலம் கோர்ட்டில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, கைப்பற்றப்பட்ட ரூ.34¼ லட்சத்தை நேற்று சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு கோர்ட்டு நீதிபதி ரெய்கானா பர்வீன் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைத்தனர்.