புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-26 20:08 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 42 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 763 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 243 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது கொரோனா வெகுவாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது மொத்தம் 36 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 16 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 20 பேர் திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 7 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 52 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 581 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது. மாவட்டத்தில் நேற்று 1,750 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்