இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்
பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
கடையம் அருகே உள்ள மேட்டூர் ஊரைச் சேர்ந்தவர் பால்துரை. இவரது மகள் கவிதா (வயது 28). இவருக்கும், திப்பணம்பட்டி பூவரசன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வன் என்பவருக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. செல்வன் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில் செல்வனுக்கும், கவிதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் கவிதா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கவிதாவின் தந்தை பால்துரை, “தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கவிதாவின் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவிதாவுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால், தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடைபெற்று வருகிறது.