போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.ய.சி. உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. பணிமனை செயலாளர் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் கேசவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தன்னிச்சையாக 10 சதவீத போனஸ் அறிவித்ததை கண்டித்தும், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தண்டபாணி, மயில்வாகனன் உள்பட போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.