ஆற்காடு, அரக்கோணத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-26 18:14 GMT
ஆற்காடு

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி ஆற்காடு பஸ் நிலையத்தில் இந்துமுன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் ஜெகன், மணிகண்டன், பா.ஜ.க.  நகர தலைவர் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் சுவால்பேட்டை சுந்தர விநாயகர் கோவில் அருகே இந்துமுன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன், திலிப் குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் பாபாஸ் பாபு, அரக்கோணம் ஒன்றிய பா.ஜ.க. விவசாய அணி தலைவர் ஷியாம் குமார் ரெட்டி, மாவட்ட பட்டியல் அணி துணை தலைவர் இன்பா, முன்னாள் நகர தலைவர் லியோவேலு, கிருஷ்ணமூர்த்தி, அன்னையர் முன்னணி ரோஜா, ஸ்ரீதேவி தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்