தந்தை-மகன்கள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தந்தை-மகன்கள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-10-26 17:47 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த நரியனேரி அருகே உள்ள கொண்டகிந்தனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 45), மா செடி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜா (52), இவரது இரண்டாவது மனைவி வளர்மதி, மகள் அனிதா. நரசிம்மனுக்கும், அனிதாவுக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 குழந்தைகள் உள்ளனர். ராஜாவுக்கும், நரசிம்மனுக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.

நரசிம்மன் குடும்பத்தினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ராஜா மற்றும் அவரது மகன்கள் யுவராஜ், கார்த்தி ஆகியோர் நரசிம்மன் வீட்டின் பல்வேறு பகுதிகளில் குழிதோண்டி 30-க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர் குச்சிகளை வைத்துள்ளனர். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, அவரது மகன்கள் யுவராஜ், கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்