வீட்டில் பதுக்கிய 1,700 மதுபாட்டில்கள் பறிமுதல்
பெரியகுளம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியில் பாஸ்கரன் என்பவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.