வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்

வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படுகிறது என்று இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-26 17:10 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 197 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பயிர்க்கடன் தேவை உள்ள விவசாயிகள், அனைத்து வேலை நாட்களிலும் தங்கள் பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம். 
இதற்கு விண்ணப்பத்துடன், உரிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பயிர்க்கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் திண்டுக்கல் சரக துணை பதிவாளரை 73387 20603 எனும் எண்ணிலும், பழனி சரக துணை பதிவாளரை 73387 20604 எனும் எண்ணிலும், அலுவலகத்தை 0451-2461734 எனும் எண்ணிலும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்