கண்மாயில் மூழ்கி காவலாளி பலி

கண்மாயில் மூழ்கி காவலாளி பலியானார்.

Update: 2021-10-26 17:07 GMT
காரைக்குடி, 
சோமநாதபுரம் போலீஸ் சரகம் காயாவயலை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 71). இவர் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்