டீக்கடையை சூறையாடிய 3 பேர் கைது

நாகூரில் டீக்கடையை சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-26 17:02 GMT
நாகூர்:
நாகூரில் டீக்கடையை சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டீக்கடை சூறை
நாகூர் கிழக்கு கடற்கரை சாலை பெட்ரோல் பங்க் அருகில் வடகுடி சன்னதி தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் சுந்தரராஜ் (வயது 30) என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 3 வாலிபர்கள் சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது சுந்தரராஜ் அருகில் பெட்ரோல் பங்க் இருப்பதால் சிகரெட் விற்பனை செய்வது இல்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 3 வாலிபர்களும் கடையை அடித்து உடைத்து சூறையாடினர்.  
3 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கடையை சூறையாடிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாகூரை அடுத்த பாலக்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் அமல்ராஜ் (30), அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் வினோத்குமார் (21), வடக்கு தெருவை சேர்ந்த பெத்தான் மகன் ஜோதிபாஸ் (24) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்