காரைக்குடி,
காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியை சேர்ந்தவர் முத்து அழகர் (வயது 20). இவர் முதல் போலீஸ் பீட் அருகே உள்ள ஒர்க் ஷாப்பில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தார். சம்பவத்தன்று முத்து அழகர் அதே பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தினை முத்துஅழகர் தொட்டபோது அதில் பாய்ந்து இருந்த மின்சாரம் தாக்கியது. உடனே அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.