வைகை ஆற்றில் மழை நீர் வரத்து அதிகரிப்பு

திருப்புவனம் வைகை ஆற்றில் மழைநீர் வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2021-10-26 16:57 GMT
திருப்புவனம், 
திருப்புவனம் வைகை ஆற்றில் மழைநீர் வரத்து அதிகரித்து உள்ளது.
படுகை அணை
திருப்புவனம் வைகை ஆற்றில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் மேல்புறம் வைகை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.1 கோடி செலவில் படுகை அணை கட்டப்பட்டு உள்ளது. இந்தப் படுகை அணையின் அருகே அருப்புக்கோட்டை, திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் திட்ட கிணறுகள் செயல்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் படுகை அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். 
இதன் மூலம் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் திட்டகிணறுகளுக்கு நீராதாரம் அதிகமாக கிடைத்து வரும். வைகை ஆற்றில் ஈரப்பதம் இருப்பதால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து 2 தினங்களில் திருப்புவனம் படுகை அணைக்கு வந்து விடும். முன்பு வைகை அணையில் தண்ணீர் திறந்தால் திருப்புவனம் பகுதிக்கு வர 4 முதல் 5 நாட்கள் ஆகும்.
நீர்மட்டம்
 வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால் இரு கரை ஓரங்களிலும் உள்ள தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள், மற்றும் கிணற்று பகுதிகளில் நீர்மட்டம் உயரும். தற்போது மதுரை பகுதியில் பெய்த கனமழையால் மழை தண்ணீர் ஆற்றில் வருகிறது. இந்த மழை தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நேற்று திருப்புவனம் படுகை அணையில் நிரம்பி வழிந்து ஓடியது.

மேலும் செய்திகள்